படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 9வது பதிவு
மெயிலில் வந்த ஆங்கில மேட்டரை மொழி பெயர்த்திருக்கிறேன். என்சாய் !
தந்தைக்கு ஓர் மடல் !
****************
ஒரு தந்தை தன் டீன்ஏஜ் மகளின் அறைப்பக்கம் சென்றபோது, அறை மிக சுத்தமாகவும், பொருட்கள் இருக்க
வேண்டிய இடத்தில் இருப்பதையும் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்து, அறையில் நுழைந்தவர், படுக்கையில்
தலையணையின் மேல் "என் அன்புள்ள அப்பாவுக்கு" என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தை கண்டு துணுக்குற்று,
'ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது' என்ற பயத்தில் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத்
தொடங்கினார்.
என் அன்புள்ள அப்பா,
மிகுந்த மன வருத்தத்துடன், இதை எழுதுகிறேன். நான் வீட்டை விட்டுப் போகிறேன். இப்படி
சொல்லாமல் கொள்ளாமல், என் புதிய காதலன் கமலேஷ¤டன் நான் ஓடிப் போவதற்குக் காரணம், உங்களுடனும்,
அம்மாவுடனும் ஓர் அனாவசிய சண்டையைத் தவிர்க்கவே. கமலேஷ் என் மேல் மிகுந்த ஆசை வைத்துள்ளார்.
எனக்கும் அவர் மேல் கொள்ளை ஆசை ! கமலேஷ் உடலெங்கும் துளையிட்டு ஆபரணங்கள் அணிந்தும், பச்சை
குத்தியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் போல் உடை அணிந்தும் காணப்பட்டாலும் நீங்கள் அவரைச்
சந்தித்தால், நிச்சயம் அவரை விரும்புவீர்கள் !!!
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், நான் கர்ப்பமாக இருக்கிறேன். கமலேஷ், நான் குழந்தை
பெற்றுக் கொள்வதையும், நாங்கள் சேர்ந்து சந்தோஷமாய் வாழ்வதையும் மிகவும் எதிர்பார்க்கிறார்.
கமலேஷ¤க்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் (45 எல்லாம் இக்காலத்தில் ஒரு வயதா என்ன ?)
இருந்தாலும், அவர் ஏழையாக இருந்தாலும், எனக்குக் கவலையில்லை. தூய காதலுக்கு நடுவில் இவையெல்லாம் துச்சம்
என்பது என் எண்ணம். நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் தானே ???
கமலேஷிடம் பல நல்ல இசை ஆல்பங்கள் உள்ளன. காட்டின் நடுவே, தனிமையான சூழலில், ஒரு அழகான
இடத்தில் அவர் வாழ்கிறார். கமலேஷ¤க்கு என்னைத் தவிர இன்னும் சில பெண்களுடன் தொடர்பு
இருந்தாலும், அது குறித்து எனக்குக் கவலையில்லை. அவருக்குத் தெரிந்த விதத்தில், அவர் என்னிடம்
விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! நான் நிறைய குழந்தைகள் அவருக்கு பெற்றுத் தர வேண்டும்
என்பது அவர் ஆசை, என் கனவும் அதுவே.
மரிஜுவானா எவ்வளவு அற்புதமான விஷயம் என்பதை எனக்கு கற்றுத் தந்தவர் கமலேஷ் தான். கஞ்சா
வழங்கும் பேருவகையை எனக்கு அறிமுகம் செய்தவரும் அவரே ! நாங்கள் தினமும் பிரார்த்தனை செய்வோம்,
எய்ட்ஸை குணப்படுத்த மருந்து சீக்கிரம் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்று, அது நடந்தால், கமலேஷின்
உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக தேறும் அல்லவா ???
என்னைப் பற்றி கவலைப்பட்டு உங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இப்போது 15
வயது, நல்லது கெட்டதும், என்னை கவனித்துக் கொள்ளவும், எனக்குத் தெரியும் !!! ஒரு நாள் நாங்கள்
உங்களை சந்திக்க திரும்பி வருவோம், உங்கள் பேரக் குழந்தைகளைப் பார்க்க உங்களுக்கு மட்டும் ஆசை
இருக்காதா என்ன ?
உங்கள் அன்பு மகள்,
அனிதா
**********************************
கடிதத்தில் முடிவில், 'மறுபக்கம் பார்க்கவும்" என்று எழுதியிருந்ததைப் பார்த்த தந்தையார், இன்னும்
என்ன குண்டை தலையில் போடப் போகிறாளோ என்ற அதிர்ச்சியில், கைகள் நடுங்க, கடிதத்தைத்
திருப்பி வாசித்தார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பின் குறிப்பு: நான் மேலே எழுதிய எதுவும் உண்மையில்லை ! நான் பக்கத்து வீட்டில் இருக்கிறேன்.
என் மேசையின் நடு டிராயரில் இருக்கும் என் ரிப்போர்ட் கார்ட் மதிப்பெண்களை விடவும்,
வாழ்க்கையில் பல மோசமான விஷயங்கள் உள்ளன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்பினேன். கார்டில்
கையெழுத்திட்டு விட்டு, நான் நம் வீட்டுக்கு வர எது பாதுகாப்பான சமயம் என்பதை தொலைபேசவும் ! ஐ
லவ் யூ, அப்பா :)
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 242 ***
22 மறுமொழிகள்:
இவ்வளவையும் படித்துவிட்டு அடுத்த பக்கத்திற்குப் போவதற்குள் அப்பா மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தால் என்ன ஆகும் என்று அந்தப் பெண் சிந்திக்காமல் விட்டு விட்டதே சாமி!
சூப்பர் .........>!
:)))))
:-))))))))))))))))))))))))))
குறும்புக்காரி
இவ்வளவையும் படித்துவிட்டு அடுத்த பக்கத்திற்குப் போவதற்குள் அப்பா மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தால் என்ன ஆகும் என்று அந்தப் பெண் சிந்திக்காமல் விட்டு விட்டதே சாமி!
சுப்பையா அவர்களே, சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும், திரும்பவும் படிக்க வைத்து விட்டது, உங்கள் மொழிபெயர்ப்பு & நடை...
கலக்குங்க :-))
***
அப்பா திரும்பவும் கடிதம் எழுதினால்....
அன்புள்ள மகளே,
இவ்வுளவு புத்திசாலித்தனமாக, ஸ்மார்ட்டாக யோசிக்கும் திறமையுள்ள நீ, இத்திறமையை படிப்பில் காட்டியிருந்தால் இக்கடிதம் எழுத வாய்ப்பில்லாமலே போயிருக்குமல்லவா ?? புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்...
***
எப்படி இருக்குங்க பாலா :-))))
progress report இன்னா, இனி அப்பா எதில் வேண்டுமானுலும் கையெழுத்து போட்டுத் தர ரெடியாக உள்ளார்!
:-)))
//சோம்பேறி பையன் said...
அப்பா திரும்பவும் கடிதம் எழுதினால்....//
இதுவும் சூப்பர்! :-)))
லெட்டர்-ல்லாம் எழுதி வச்சிட்டு போறாங்களா? ரொம்பவும் நல்ல பொண்ணா இருப்பாங்க போல இருக்கே!
இப்பல்லாம் SMS தானே இதுக்குக் கூட யூஸ் பண்ணறாங்க :-)
அந்த பெண்ணின் பெயர் அனிதாவா? பாலாவா? பின் குறிப்பிற்கு முன் உங்கள் அன்பு மகள்,அனிதா என்றும் , முடிவில் என்றென்றும் அன்புடன் பாலா என்றும் உள்ளதே? ;) ;)
SP.VR.SUBBIAH,
//இவ்வளவையும் படித்துவிட்டு அடுத்த பக்கத்திற்குப் போவதற்குள் அப்பா மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தால் என்ன ஆகும் என்று அந்தப் பெண் சிந்திக்காமல் விட்டு விட்டதே சாமி!
//
ஒரு அப்பா மாதிரியே யோசிக்கிறீங்க :) நன்றி.
கோவி.கண்ணன்,
நன்றி. ரொம்ப சிரிக்காதீங்க :)
ஜி.ரா.,
நீங்க கோவி.கண்ணனை விட நிறைய சிரிச்சீங்க போல தெரியுது (ஸ்மைலி நீளத்தை வச்சு சொன்னேன் :)) நன்றி.
நன்றி. அன்புத் தோழி தயா :)
இலவசக்கொத்தனார், Chandravathanaa,
நன்றி.
வெங்கட்ராமன்,
//
சுப்பையா அவர்களே, சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
//
சுப்பையாவுக்கு சொன்னது தான் சார் உங்களுக்கும் :)))
சோம்பேறி பையன் ,
//
அப்பா திரும்பவும் கடிதம் எழுதினால்....
அன்புள்ள மகளே,
இவ்வுளவு புத்திசாலித்தனமாக, ஸ்மார்ட்டாக யோசிக்கும் திறமையுள்ள நீ, இத்திறமையை படிப்பில் காட்டியிருந்தால் இக்கடிதம் எழுத வாய்ப்பில்லாமலே போயிருக்குமல்லவா ?? புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்...
***
எப்படி இருக்குங்க பாலா :-))))
//
புத்திசாலித்தனமாக, ஸ்மார்ட்டாக யோசிக்கும் திறமையுள்ளவர் நீங்கள் என்று நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன் ;-))) நன்றி.
கண்ணபிரான்,
நன்றி.
//லெட்டர்-ல்லாம் எழுதி வச்சிட்டு போறாங்களா? ரொம்பவும் நல்ல பொண்ணா இருப்பாங்க போல இருக்கே!
இப்பல்லாம் SMS தானே இதுக்குக் கூட யூஸ் பண்ணறாங்க :-)
//
நீங்க சொல்றதும் சரி தான் :)))
//அந்த பெண்ணின் பெயர் அனிதாவா? பாலாவா? பின் குறிப்பிற்கு முன் உங்கள் அன்பு மகள்,அனிதா என்றும் , முடிவில் என்றென்றும் அன்புடன் பாலா என்றும் உள்ளதே? ;) ;)
//
யோவ் லார்ட் லபக் தாஸ¥,
ஒமக்கிருக்கிற குசும்பு யாருக்கும் கிடையாதுய்யா :)))
:))))
nalla suspense :)
கொஞ்சம் சிரிப்பாவும் நிறைய ஆச்சரியமாவும் இருக்கு!! :))
நம்ம ஊர் ஸ்டைலில அப்பா கையெழுத்தை தானே போட்டுக் கொள்ளும் சிம்பிள் சொல்யூஷன் கூட தெரியாத மக்குப் பொண்ணா இருக்கே ?
:))
haniff,தம்பி, Sankar,
nanRi !
Post a Comment